சஞ்சய் தத்தின் பிறந்தநாளை முன்னிட்டு கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை லியோ படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தில் ஏராளமான உச்ச நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்ததை தொடர்ந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் அந்தோனி தாஸ் என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் சஞ்சய் தத்தின் பிறந்த நாளை முன்னிட்டு ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை லியோ படக்குழு வெளியிட்டுள்ளது. அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.