லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் தளபதி விஜய். ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவரது நடிப்பில் வரும் அக்டோபர் 19ஆம் தேதி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பயங்கர எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள “லியோ” திரைப்படம் வெளியாக உள்ளது. திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், மிஷ்கின், பாபுஆண்டனி என ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்ததை தொடர்ந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் படகுழு தீவிரம் காட்டி வருகிறது.

அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தின் முதல் பாடல் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் கவனத்தையும் வெகுவாக ஈர்த்திருந்ததை தொடர்ந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படத்தின் இசை வெளியீட்டு விழா தொடர்பான தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற இருப்பதாக சில தகவல்கள் பரவி வந்த நிலையில் தற்போது லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 23-ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இதில் பிரபலங்கள், ரசிகர்கள் என 6000 மேற்பட்டோர் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகளை படக்குழு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே அடுத்த வாரம் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் 1500 பேரை சென்னையில் அடுத்த வாரம் விஜய் சந்திக்க இருப்பதாகவும் அதில் அரசியல் கட்சி தொடங்குவது மற்றும் நலத்திட்ட பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.