
லியோ படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடிக்க நோ சொல்லியுள்ளார் நடிகர் விஷால்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தின் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்தில் சஞ்சய் தத்,கௌதம் மேனன், அர்ஜுன், யோகி பாபு என எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். நாயகியாக திரிஷா நடிக்க பிரியா ஆனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஆக்சன் கிங் அர்ஜுன் நடித்துள்ள இந்த படத்தில் நடித்துள்ள நிலையில் அவருடைய கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் லோகேஷ் கனகராஜ் விஷாலை தான் அனுப்பியுள்ளார். ஆனால் விஷால் லியோவுக்கு நோ சொல்லிவிட்டார்.
அதற்கான காரணம் என்ன என்பது குறித்து விஷால் தற்போது விளக்கம் அளித்துள்ளார். அதாவது லியோ படத்தில் நடிக்க நான்கு மாதங்கள் கால்ஷீட் கேட்டார் லோகேஷ். அப்போது நான் மார்க் ஆண்டனி படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்ததால் என்னால் நடிக்க முடியாமல் போய்விட்டது. லோகேஷ் கனகராஜும் என்னுடைய சூழ்நிலையை புரிந்து கொண்டார் என தெரிவித்துள்ளார்.
