
காமெடியில் ரசிகர்களை கவர்ந்து வரும் லெக் பீஸ் படத்தின் டிரைலர்..!
லெக் பீஸ் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து ஹீரோவாகவும் சில படங்களில் கலக்கி வருபவர் யோகி பாபு. தற்போது இவரது நடிப்பில் லெக் பீஸ் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
ஸ்ரீநாத் இயக்கத்திலும், ஹீரோ சினிமாஸ் சி. மணிகண்டன் தயாரித்து நடித்துள்ள இந்த படத்திற்கு பிஜோர்ன் சூர்ராவ் இசையமைத்துள்ளார்.மேலும் விடிவி கணேஷ், மொட்ட ராஜேந்திரன், கருணாகரன், மைம் கோபி, ரமேஷ் திலக், போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் மார்ச் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் தற்போது ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. ஆரம்பத்திலேயே என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பா நண்பிகள் என ஆரம்பிக்கும் விஜயின் வசனம் பட்டையை கிளப்பியுள்ளது.முற்றிலும் காமெடி நிறைந்த இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது என்றே சொல்லலாம்.