Latest Updates about Valimai Movie
Latest Updates about Valimai Movie

கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக படத்தின் ரிலீஸுக்கு சூட்டிலும் பல்வேறு மாற்றங்களை படக்குழு எடுத்துள்ளன.

Latest Updates about Valimai Movie : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இன்று அஜீத்தின் பிறந்தநாள் என்பதால் வலிமை அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

எங்க படத்தை எங்க இஷ்டத்துக்கு வெளியிடுவோம்.. அத நீங்க தடுக்க கூடாது – சூர்யாவுக்கு ஆதரவாக களமிறங்கிய தயாரிப்பாளர்.!

ஆனால் தயாரிப்பாளர் போனி கபூர் ஊரடங்கு முடியும் வரை எந்த ஒரு விளம்பரமும் படத்தை பற்றி செய்யப்படாது என திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். இதனால் வலிமை அப்டேட்டை எதிர் பார்த்த ரசிகர்கள் ஏமாந்து போனதுதான் மிச்சம்.

ஆனாலும் படத்தில் பற்றிய சில தகவல்கள் கிடைத்துள்ளன. ஊரடங்கு உத்தரவு காரணமாக இப்படம் திட்டமிட்டபடி தீபாவளிக்கு ரிலீஸ் ஆவது சந்தேகமே.

இதனால் இந்த படத்தை பொங்கலில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. மேலும் இனி எடுக்கவேண்டிய காட்சிகள் பெரும்பாலும் வெளிநாடுகளில் எடுக்க வேண்டியது தான். ஆனால் அதற்கு தற்போதைய சூழ்நிலையில் சாத்தியமில்லை என்பதால் சென்னையிலேயே செட் அமைத்து படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.