JSK Sathish Support to Suriya
JSK Sathish Support to Suriya

சூர்யாவுக்கு ஆதரவாக பிரபல தயாரிப்பாளர் ஒருவர் களமிறங்கியுள்ளார்.

JSK Sathish Support to Suriya : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் தொடர்ந்து பல நல்ல படங்களை தயாரித்து வருகிறார்.

தற்போது இவரது தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்மகள் வந்தாள். ஊரடங்கு உத்தரவு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டு உள்ளதால் இப்படத்தை அமேசான் பிரைம் விடியோவில் நேரடியாக வெளியிட படக்குழு முடிவு செய்து அதற்கான வியாபாரத்தை முடித்து விட்டது.

ஊரடங்கு உத்தரவால் தள்ளிப் போன சூரரைப் போற்று இந்த மாதத்தில் தான் ரிலீசாக போகிறதா? – முதன்முறையாக வெளியான சூப்பர் தகவல்.!

ரூபாய் நாலரை கோடியில் உருவாகி இந்த இந்தப் படத்தை ரூபாய் 9 கோடிக்கு விற்பனை செய்துள்ளனர். தியேட்டர்களில் வெளியிடாமல் நேரடியாக OTT வழியாக வெளியிடுவதை தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் கண்டித்து வருகிறது.

இதனால் இனிமேல் சூர்யா, ஜோதிகா, கார்த்தி ஆகியோரின் படங்களை தியேட்டரில் ரிலீஸ் செய்யமாட்டோம் எனவும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் சூர்யாவுக்கு ஆதரவாக தயாரிப்பாளர் JSK சதீஷ்குமார் அவர்கள் களமிறங்கியுள்ளார். படத்தை வெளியிடுவது தயாரிப்பாளரின் தொழில் சுதந்திரம், படத்தை ஆன்-லைனில் வெளியிட கூடாது என மிரட்டுவது நியாயமற்றது என கூறியுள்ளார்.