Soorarai Pottru Movie Release Plan
Soorarai Pottru Movie Release Plan

சூரரைப் போற்று படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Soorarai Pottru Movie Release Plan : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரை போற்று.

ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படத்தில் சூர்யா 18 வயது இளைஞராக நடிப்பதற்காக தன்னுடைய உடல் எடையை குறைத்தது மட்டுமில்லாமல் தன்னுடைய நிறத்தையும் மாற்றிக் கொண்டுள்ளார்.

விஜய், ரஜினி பட தயாரிப்பு நிறுவனத்திற்கு நோ சொன்ன அஜித் – தல 61 பற்றி வெளியான அதிரடி தகவல்.!

இப்படம் ஏப்ரல் மாதமே ரிலீஸ் ஆகியிருக்க வேண்டியது. குரானா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளி போய் உள்ளது.

இந்த நிலையில் தள்ளிப் போன இப்படத்தை வரும் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. சூர்யாவின் திரைப்பயணத்தில் சூரரைப் போற்று ஒரு முக்கிய படமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.