Ajith Says No to Sun Pictures
Ajith Says No to Sun Pictures

விஜய், ரஜினி பட தயாரிப்பு நிறுவனத்திற்கு நோ சொல்லியுள்ளார் தல அஜித்.

Ajith Says No to Sun Pictures : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை தொடர்ந்து அஜித் யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகம் இருந்து வந்தது.

ஹைதராபாத்திலிருந்து பைக்கிலேயே சென்னை வந்து சேர்ந்த அஜித் – பதறிப்போன வலிமை படக்குழு.!

இந்த நிலையில் நேற்று கிடைத்த தகவலின் படி அஜித்தின் அடுத்த படத்தை சுதா கொங்கரா இயக்க இருப்பதாகவும் இந்த படத்தை கோகுலம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்து இருந்தன.

மேலும் இந்தப் படத்தைத் தயாரிப்பதற்காக சன் பிக்சர்ஸ் நிறுவனமும் போட்டி போட்டு உள்ளது. ஆனால் அஜித் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு கால்சீட் கொடுக்காமல் நோ சொல்லியுள்ளார். இதனால் அந்நிறுவனம் வருத்தம் அடைந்துள்ளது.

கடந்த சில வருடங்களாகவே ரஜினி மற்றும் விஜயின் படங்களை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.