Latest Update of Master Release in OTT
Latest Update of Master Release in OTT

மாஸ்டர் திரைப்படத்தின் நஷ்டத்தை தவிர்க்க படக்குழு இந்த படத்தை OTT-ல் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Latest Update of Master Release in OTT : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

எக்ஸ்பி பிலிம் கிரேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை ஏப்ரல் 9-ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால் கொரானா ஊரடங்கு காரணமாக படத்தின் ரிலீஸ் தொடர்ந்து தள்ளிப் போய் வருகிறது.

இதனால் OTT நிறுவனங்கள் இந்த படத்தை வெளியிட போட்டி போட்டு பேச்சுவார்த்தைகளை நடத்தின. ஆனால் படக்குழு படம் தியேட்டரில் மட்டும் தான் வெளியாகும் என கூறியது.

எல்லாம் ஓவர், தளபதி விஜயின் மாஸ்டரும் OTT ரிலீஸ்.. விஜய் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்திய பிரபல பத்திரிக்கை.!!

தியேட்டர்கள் திறக்கப்பட்டதும் ரிலீஸ் செய்யலாம் என படக்குழு தொடர்ந்து காத்துக் கொண்டிருக்கும் நிலையில் திரையரங்குகள் திறப்பது என்பது கேள்விக்குறியான ஒன்றாகவே இருந்து வருகிறது.

இதன் காரணமாக தற்போது படக்குழு நஷ்டத்தை தவிர்க்க OTT-ல் இந்த படத்தை வெளியிட முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அமேசான் நிறுவனம் மாஸ்டர் படக்குழுவினருடன் மும்முரமான பேச்சுவார்த்தையில் இறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒடிடி-ல் மாஸ்டர் ரிலீஸ் என வெளியாகியுள்ள தகவல் விஜய் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.