தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் OTT ரிலீஸ் தான் என பிரபல பத்திரிக்கை அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளது.

Shocking Update on Master Release : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, சேத்தன், ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், மகேந்திரன், விஜய் டிவி தீனா, விஜய் டிவி ரம்யா, வர்ஷா பொல்லம்மா, நடிகர் பிரேம் உள்ளிட்ட பல நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

உலகம் முழுவதும் ஏப்ரல் ஒன்பதாம் தேதி இப்படம் வெளியாகும் என படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில் பரவி வரும் கொரானா வைரஸ் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டது.

மாஸ்டர் மற்றும் வலிமை படம் ரிலீஸ் எப்போது தெரியுமா?

இதனால் படத்தை ரிலீஸ் செய்யும் முடிவு கைவிடப்பட்டது. இதனையடுத்து எப்போது திரையரங்குகள் திறக்கப்படும் என படக்குழு ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது.

மேலும் பல OTT நிறுவனங்கள் மாஸ்டர் படத்தின் வியாபாரம் பேசி வரும் நிலையில் படக்குழு திரையரங்குகளில் தான் வெளியிடுவோம் என கூறி வருகிறது.

இப்படியான நிலையில் பிரபல பத்திரிக்கை ஒன்று மாஸ்டர் படத்திற்கான வியாபாரம் அனைத்தும் முடிந்துவிட்டது. இந்தப் படமும் சூரரைப்போற்று படத்தைப் போல OTT வழியில் தான் ரிலீஸ் செய்ய தகவலை வெளியிட்டுள்ளது.

இதனால் ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இது உண்மையாக இருக்கக் கூடாது எனவும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த தகவல் குறித்து படக்குழு சரியான விளக்கம் அளித்தால் தான் உண்மை என்ன என்பது தெரிய வரும்.