பிக் பாஸ் ஷோவுக்கு வந்த சிக்கல்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி .!

பிக் பாஸ் ஷோ குறித்து அதிர்ச்சியான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் தெலுங்கு இந்தி என அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகின்றனர்.
பிக் பாஸ் தமிழில் 7 சீசன்கள் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி இருந்தாலும் தற்போது எட்டாவது சீசன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி இருந்தார் அதேபோல் ஹிந்தியில் 20 வருடங்களாக சல்மான் கான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில் தற்போது பிக் பாஸ் ஷோ நடப்பதே சந்தேகம் என தகவல் வெளியாகி உள்ளது அதாவது ஷோவை நடத்தும் தயாரிப்பு நிறுவனமான Banijai Aisia நிறுவனம் தற்போது விலகி விட்டதாக தகவல் சொல்லப்படுகிறது.
இதனால் பிக் பாஸ் ஷோ ஒளிபரப்பாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
