Labour Day
Labour Day

Labour Day : சென்னை: இன்று மே 1- ஆம் தேதி மே தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தலைவர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மே தின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது,

‘உழைக்கும் மக்களின் உரிமைத் திருநாளான இந்த இனிய நாளில், தொழிலாளர்கள் நலமுடனும் வளமுடனும் மகிழ்வாக வாழ்ந்திட வாழ்த்தி,

எனது அன்பிற்குரிய தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த மே தின நல்வாழ்த்துகள்’ என தெரிவித்தார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவிக்கையில்,

உழைப்பாளர் தினத்தை உவகையோடு கொண்டாடி மகிழும் தொழிலாளப் பெருமக்கள் அனைவருக்கும் எங்களது உளமார்ந்த மே தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம் என கூறியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்தியில்: பாட்டாளிகளின் உரிமைகளை வென்றெடுக்கும் பயணத்தின் தொடக்கமாக நடப்பாண்டின் பாட்டாளிகள் நாள் அமையட்டும் என தெரிவித்துள்ளார்.

அதை தொடர்ந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தொழிலாளர் நலன் காக்கும் அரசு பொறுப்பு ஏற்றால்தான், பெற்ற உரிமைகளைப் பேணிப் பாதுகாக்க முடியும்.

அதற்கான சூளுரையை மே நாளில் ஏற்போம் என வாழ்த்துக்களை தெரிவித்துக் உள்ளார்.

கே.எஸ்.அழகிரி தனது வாழ்த்தாக, ஒரு நாளைக்கு 8 மணி நேரம் வேலை மற்றும் ஓய்வு உள்ளிட்ட சில உரிமைகள் கிடைத்தன.

தொழிலாளர்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துகள்.தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து செய்தியில்: ஜாதி, மதம், இனம், மொழி, நிறம் என்ற வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, மனித குலம் முழுவதும் கொண்டாடும் நாள் மே தினமாகும்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், உழைப்பின் வலிமையால் இந்த உலகத்தை இயக்கிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் இனிய மே தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என தனது வாழ்த்துக்களை தமிழக மக்களுக்கு தெரிவித்துள்ளார்.

வி.சி.க. தலைவர் திருமாவளவன் கூறுகையில், இந்திய தொழிலாளர்களின் வாழ்வுரிமைகளை மீட்டளித்த புரட்சியாளர் அம்பேத்கரை நினைவு கூர்ந்து அவருக்கு நன்றி செலுத்துவது உழைக்கும் வர்க்கத்தின் கடமை என்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது என தெரிவித்தார்.

இவ்வாறு தமிழகத்தின் பல்வேறு தலைவர்கள் தங்களது மே தின வாழ்த்துக்களை தமிழக மக்களுக்கு தெரிவித்துள்ளனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.