பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து விலகுவதாக வெளியான தகவலுக்கு விளக்கம் அளித்துள்ளார் குமரன்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் கதிர் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் குமரன்.

இவர் தற்போது படங்கள் மற்றும் வெப் சீரிஸ் தொடர் உள்ளிட்டவைகளில் கவனம் செலுத்தி நடித்து வருவதால் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து விலகுவதாக செய்தி வெளியானது.

இந்த நிலையில் குமரன் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்துக் கொண்டே வதந்தி, மாயத் தோட்டா உள்ளிட்ட வெப் சீரிஸ் தொடர்களில் நடித்து விட்டேன்.

வரும் காலங்களில் ஏதாவது படங்களிலோ அல்லது வெப் சீரிஸ் தொடர்களிலோ ஒப்பந்தமாகி கால்ஷீட் பிரச்சனை ஏற்பட்டால் தொடரில் இருந்து கண்டிப்பாக விலகுவேன் என தெரிவித்துள்ளார். இதனால் குமரனின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.