கொட்டுக்காளி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது.

Kottukaali movie shooting wrap:

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் சூரி. நகைச்சுவை நடிகராக அறிமுகமான இவர் தற்போது ஹீரோவாகவும் கலக்கி வருகிறார். அதன்படி இவரது நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் அண்மையில் வெளியான விடுதலை திரைப்படம் பலராலும் பாராட்டுகளை குவித்து வசூல் வேட்டையாடுவது.

அதனைத் தொடர்ந்து விடுதலை படத்தின் பாகம் இரண்டில் நடித்து வரும் சூரி அத்துடன் இணைத்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகி வரும் “கொட்டுக்காளி” திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இப்படத்தை கூழாங்கல் படத்தை இயக்கிய பி.எஸ் வினோத்ராஜ் இயக்க இதில் கதாநாயகியாக மலையாள நடிகை அன்னா பென் நடித்து வருகிறார். இப்படம் தொடர்பான அறிவிப்பை சில மாதங்களுக்கு முன்பு படக்குழு அறிவித்திருந்த நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்து உறுதி செய்துள்ளது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.