வீடியோ காலில் பேச 25 ஆயிரம் ரூபாய் போட்டோவுக்கு ஆயிரம் ரூபாய் என புதிய ஆப் ஒன்றை உருவாக்கியுள்ளார் கிரண் ரதோட்.

இந்திய திரையுலகின் பிரபல நடிகையாக வலம் வந்தவர் கிரன் ரதொட். தமிழ் தெலுங்கு மலையாளம் போன்ற மொழிகளில் பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவர் தற்போது பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார்.

வீடியோ காலில் பேச 25 ஆயிரம் ரூபாய்.. போட்டோவுக்கு ஆயிரம் ரூபாய் - பணம் சம்பாதிக்க புதிய ஆப்பை தொடங்கிய கிரண் ரத்தோட்

41 வயதாகும் இவர் பட வாய்ப்புகளுக்காக சமூக வலைதளங்களில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் இருந்து வருகிறார். ஆனாலும் படங்களில் வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் தற்போது புதிய யுத்தியை கையில் எடுத்துள்ளார்.

தனது பெயரில் புதிய ஆப் ஒன்றை உருவாக்கி அதில் வீடியோ காலில் 25 நிமிடம் பேச இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய் , 14 நிமிடங்கள் பேச பதினான்காயிரம் ரூபாய். கலக்கி போட்டோக்களை நேரடியாக உங்கள் மொபைல் போனிற்கு பெற ஆயிரம் ரூபாய், நார்மல் காலில் 10 நிமிடம் பேச பத்தாயிரம் ரூபாய் என புதிய லிஸ்ட்டோடு ஆப்பை வெளியிட்டுள்ளார். அதை விட முக்கியமான விஷயம் ஆப்பை பயன்படுத்தவே 49 ரூபாய் செலுத்த வேண்டுமாம்.

வீடியோ காலில் பேச 25 ஆயிரம் ரூபாய்.. போட்டோவுக்கு ஆயிரம் ரூபாய் - பணம் சம்பாதிக்க புதிய ஆப்பை தொடங்கிய கிரண் ரத்தோட்

இதனை பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் உங்களுக்கு ஓவரா தெரியலையா என விமர்சனம் செய்வதோடு இதுபோன்ற ஆப்பை தடை செய்ய வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.