ரவி ஸ்ருதி வீட்டுக்கு வர கொளுத்தி போட்டுள்ளார் ரோகிணி.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் பிச்சைக்கார வேடத்தில் வந்திருப்பதை பார்த்து விஜயா அதிர்ச்சி அடைய அம்மாவும் பணம் தர மாட்டேன்னு சொல்லிட்டாங்க எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல என்று மனோஜ் சொல்ல ரோகிணி யாரையாவது யோசிக்கலாம் என்று அவரை உள்ளே அழைத்துச் செல்கிறார்.
உள்ளே அழைத்துச் சென்றபோது நீ எதுக்கு மனோஜ் இப்படி பண்ண என்று போட்டு அடிக்கிறார். வேற ஏதாவது யோசிப்போம் நான் ஒன்னு அப்படியே விட்டு விட மாட்டேன் என்று கண் கலங்குகிறார்.
அடுத்ததாக சுதா ஸ்ருதி வீட்டுக்கு கிளம்பியதால் அப்செட் இருக்க வாசுதேவன் இதெல்லாம் நடக்குமோ எனக்கு முன்னாடியே தெரியும். சுருதி என்னைக்கு ஒரே மாதிரி இருந்திருக்க பிடிக்கலைன்னு சொல்றத திடீர்னு பிடிக்குதுன்னு சொல்லுவா. வேண்டாம்னு சொன்னதை வேணும்னு சொல்லுவா அவ எப்பவுமே இப்படித்தானே என்று சொல்கிறார். விடு வேற ஏதாவது வாய்ப்பு கிடைக்காமையா போகும் பிளான் பண்ணலாம் என்று சொல்கிறார்.
ரவியை பார்க்க ஓட்டலுக்கு வந்த ஸ்ருதி வா வீட்டுக்கு போகலாம் என்று சொன்ன ரவி நான் உங்க வீட்டுக்கு வர மாட்டேன் என்று சொல்ல ஸ்ருதி உங்க வீட்டுக்குத்தான் கூப்பிடுகிறேன் என்று சொன்னதும் ரவி ஷாக் ஆகிறார். முத்து செய்த உதவியை பற்றி சொல்கிறார். இருந்தாலும் உங்க அண்ணன் மேல எனக்கு கோபம் எல்லாம் போகல அதுக்காக இப்படியே இருக்க முடியாதுல்ல என்று சொல்லி ரவியுடன் கிளம்பி வருகிறார்.
ரவி மட்டும் தனியாக வந்து நிற்க அண்ணாமலை நீ மட்டும் தனியா வா வந்த என்று கேட்க பின்னாடி சுருதி வந்து நிற்க சந்தோஷப்படுகிறார். விஜயாவை கூப்பிட்டு விட ரவியையும் சுருதியையும் பார்க்க அவர் இன்னும் சந்தோஷப்படுகிறார்.
எனக்கு தெரியும் நீங்க வந்துடுவீங்கனு, என் புள்ள என்ன விட்டு இருக்க மாட்டான் என்று சொல்லி விஜயா சந்தோஷப்பட ரோகிணி ஸ்ருதி பார்த்து அதிர்ச்சியடைகிறார். இவங்க என்ன வீட்டுக்கு வந்துட்டாங்க இவங்க பிரச்சனை முடிஞ்சா என்னை பிடிச்சிப்பாங்களே என்று பதறுகிறார்.
என்ன சுருதி இவ்வளவு சீக்கிரம் வந்துட்டீங்க அதுக்குள்ள நடந்தது எல்லாம் மறந்துட்டீங்களா நீங்க வந்தது எனக்கும் சந்தோஷம்தான் இருந்தாலும் உங்க அப்பாவுக்கு இந்த வீட்ல இருக்கவங்களால பெரிய அவமானம் நடந்திருக்கு என்று கொளுத்தி போட ஸ்ருதி பாஸ்ட் ஈஸ் ஃபாஸ்ட் நடந்தது திருப்பி பேசி பொண்ணு ஆகப்போகிறது இல்லை என்று பதிலடி கொடுக்கிறார்.
பிறகு கேக் வெட்டி ரவிக்கு ஊட்டி விட ரவி ஸ்ருதி ஊட்டி விட ரோகினியை மனோஜ்க்கு ஊட்டி விட சொல்கின்றனர். பிறகு மனோஜ் ரோகிணிக்கு ஊட்டி விடுகிறார். அடுத்ததாக மீனாவிடம் டீ கொடுத்து முத்துக்கு ஊட்டி விட சொன்ன பிறகு முத்து மீனாவுக்கு ஊட்டி விடுகிறார். அண்ணாமலை ஒரு சண்டைக்கு அப்புறமா திருப்பி ஒன்னு சேரும்போது எப்படி பேசுறது என்ற யோசனை இருக்கும் ஆனால் அது எதுவுமே இல்லாம பண்ணிட்ட என்று சுருதியை நினைத்து சந்தோஷப்படுகிறார்.
பிறகு ரவி மற்றும் மனோஜ் மொட்டை மாடியில் நின்று பேசிக் கொண்டிருக்கும் போது மனோஜ் மாமியார் மாமனார் உன்கிட்ட நல்லா பேசுற இல்ல என்று கேட்கிறார். என் மாமனார் ஜெயில்ல இருக்காரு அவரு எப்ப வெளிய வந்து எப்ப எனக்கு உதவி பண்ண போறாருன்னு தெரியல என்று புலம்புகிறார்.
கல்யாணத்துக்கு முன்னாடி லைவ் ஜாலியா இருந்தது ஆனா இப்போ அப்படி இல்ல என்று ரவி புலம்ப மனோஜ் பிலாஸபி சொல்ல முத்து கல்யாணத்துக்கு முன்னாடி கல்யாணம் கல்யாணம்னு அவசரப்பட வேண்டியது, அப்புறம் போர் அடிக்குதுனு கொழந்த வேண்டியது என்று சொல்ல திரும்பவும் மண்டபத்தில் நடந்தது பற்றி பேச்சு வர மனோஜ் திரும்பவும் அதை பேச வேண்டாம் என்று ரவியை கூட்டிச் செல்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.