திருமணத்திற்கு பிறகு கீர்த்தி சுரேஷ், மிஷ்கினுடன் இணையும் புதிய படம்..

Web Ads

தமிழ் சினிமாவில் ஏ.எல்.விஜய் இயக்கிய ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் மலையாள நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் விஜய், விக்ரம், சூர்யா, சிவகார்த்திகேயன் என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

காதல் திருமணத்திற்கு பிறகு தற்போது, இவர் அறிமுக இயக்குநர் பிரவீன் எஸ்.விஜய் இயக்கத்தில், புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தில், இயக்குநரும், நடிகருமான மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்த புதிய படத்தின் பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. கோர்ட் ரூம் டிராமாவாக உருவாக உள்ள இந்த படத்தில் ஹார்ட்பீட் சாருகேஷ், பாலசரவணன், பாலாஜி சக்திவேல், சுந்தர்ராஜன், மாலா பார்வதி, தீபா, ஸ்டில்ஸ் பாண்டியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கோயம்புத்தூரில் ஒரே கட்டமாக நடத்தி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக இயக்குநர் சுஜீத் இயக்கத்தில் ‘ஓஜி’ படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இந்த படத்தில் பிரியங்கா மோகன், பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மி, பிரகாஷ் ராஜ், ஸ்ரேயா ரெட்டி, அர்ஜுன் தாஸ், ஷாம் மற்றும் ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். பவன் கல்யாணின் ‘ஓஜி’ படம் கடந்த 25-ம் தேதி வெளியானது.

இந்நிலையில், ‘ஓஜி’ படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘ஓஜி’ திரைப்படம் உலகளவில் ரூ. 266 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

keerthy suresh and mysskins new film shooting update
keerthy suresh and mysskins new film shooting update