சீரியல் நடிகரை திருமணம் செய்து கொண்டுள்ளார் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை. அவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

Kavitha Gowda Marriage Photos : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் மீனா என்ற கதாப்பாத்திரத்தில் முதலில் நடிக்க வந்தவர் கவிதா கௌடா.

சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை - வைரலாகும் திருமண புகைப்படங்கள்

அதன் பின்னர் இவருக்கு கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததால் இந்த சீரியலில் இருந்து விலகினார். தற்போது இவருக்கு பதிலாக மீனா கதாபாத்திரத்தில் ஹேமா என்பவர் நடித்து வருகிறார்.

தற்போதைய கவிதா கவுடா சீரியல் நடிகரான சந்தன குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டுள்ளனர். இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.