சூர்யா நடிக்கும் ‘கருப்பு’ படம்: சென்னையில் 16 நாட்கள் ஷுட்டிங்..

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான ‘கங்குவா’ படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்பது தெரிந்ததே. இதனைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான ‘ரெட்ரோ’ படம் சூர்யாவின் ரசிகர்களை கவர்ந்தது.
இதனைத் தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘கருப்பு’. இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு எப்போது என்பது தெரியாமல் இருந்தது. தற்போது 16 நாட்கள் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கப்பட்டு உள்ளது. இதில் சூர்யா தவிர்த்து இதர நடிகர்களின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
இப்படத்தில் திரிஷா, நட்டி, ஆர்.ஜே.பாலாஜி, ஸ்வாசிகா, அனகா மாயா ரவி, இந்திரன்ஸ் உள்பட பலர் சூர்யாவுடன் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு, இசையமைப்பாளராக சாய் அபயங்கர் பணிபுரிந்து வருகிறார்கள். இப்படம் ஜனவரி 23-ந்தேதி வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை.
தற்போது ‘கருப்பு’ படத்தின் பணிகளை முடித்துவிட்டு, வெங்கி அட்லுரி படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. அதனை முடித்துவிட்டு ஜீத்து மாதவன் படத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார். இதன் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்கும் என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.
