கார்த்தியின் ‘வா வாத்தியாரே’ படம் எப்போது ரிலீஸ் தெரியுமா?
கார்த்தி நடிப்பில் உருவாகும் ‘வா வாத்தியாரே’ மற்றும் ‘சர்தார்-2’ படங்களின் அப்டேட் காண்போம்..
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி- கீர்த்தி ஷெட்டி நடிப்பில் உருவாகும் ‘வா வாத்தியார்’ படத்தில் கார்த்தி போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்து வருகிறார்.
மேலும், சத்யராஜ், ஆனந்தராஜ், ராஜ்கிரண், ஷில்பா மஞ்சுநாத், கருணாகரன், வடிவுக்கரசி உள்பட பலர் வருகின்றனர். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தின் ‘உயிர் பத்திக்காம’ லிரிக் வீடியோ வெளியாகி ரச வரவேற்பு பெற்றது.
இப்படத்தின் ஷுட்டிங் முடிய இன்னும் கூடுதலாக 20 நாட்கள் தேவைப்படும் நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போகிறது. அதாவது, மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகும் ‘சர்தார் 2’ ஷுட் இப்போது தொடங்கப்பட்டுள்ளது. இதனால் ‘வா வாத்தியார்’ படப்பிடிப்பில் கலந்து கொள்ள தாமதமாகும் நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளிப் போகிறது.
அவ்வகையில், நவம்பரில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் வீடியோ வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
