ஐந்தாவது மாத வளைகாப்பு புகைப்படங்களை வெளியிட்ட கனிகா சினேகன், குவியும் வாழ்த்து..!
ஐந்தாவது மாத வளைகாப்பு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் கனிகா சினேகன்.
பாடலாசிரியர் நடிகர் என பன்முக திறமை கொண்டவர் சினேகன். தற்போது சீரியல் ஒன்றில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்ற தகவலும் வெளியானது.
நீண்ட வருடம் காதலித்த நடிகை கனிகாவை திருமணம் செய்து கொண்ட இவர் கிராமத்து வாழ்க்கையை அனுபவித்து கொண்டு மனைவியுடன் அடிக்கடி போட்டோ மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். சமீபத்தில் இவர் அப்பா அம்மா ஆகப் போகிறோம் என்ற தகவலை மகிழ்ச்சியுடன் வெளியிட்டு இருந்தார்.

தற்போது அவருக்கு ஐந்தாவது மாதம் வளையல் அணியும் விழா நடைபெற்றுள்ளது. அந்தப் புகைப்படங்களை வெளியிட்டு அதில், கனிகா வரப்போகும் எங்கள் வாரிசினை வரவேற்கும் ஐந்தாம் மாத வளையல் அணியும் விழா என்று பதிவிட்டு உள்ளார். இந்தப் பதிவை பார்த்தவர் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram