கங்குவா திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடர்பான புதிய தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் 3d தொழில்நுட்பத்துடன் 10 மொழிகளில் வெளியாக இருக்கும் ‘கங்குவா’ திரைப்படத்தில் ஐந்து கெட்டப்புகளில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் வரலாற்று சார்ந்த படமாக உருவாகி வரும் இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திரிஷா பதானி நடிக்க யோகி பாபு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றன.

இப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக கொடைக்கானலில் நடைபெற்று வருகிறது. வரலாற்று காட்சிகள் தொடர்பாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் தற்போது பங்கேற்று வரும் சூர்யாவின் காட்சிகள் 10 நாட்களில் நிறைவு பெறும் என்று எதிர்பார்த்த நிலையில் புதிய அப்டேட்டாக இதன் படப்பிடிப்பு மேலும் பத்து நாட்களுக்கு தொடரும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.