கங்குவா திரைப்படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரை உலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்ட தொழில்நுட்பத்துடன் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ஸ் வீடியோ சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி வைரலானது. நாளுக்கு நாள் படம் மீது உள்ள எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில் படத்தின் படப்பிடிப்பு பணிகளும் அடுத்தடுத்த இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் சென்னையில் உள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த கட்டமாக ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி பகுதியில் நடைபெற உள்ளது. 20 நாட்களுக்கு நடைபெற இருக்கும் படப்பிடிப்பிற்காக அப்பகுதிக்கு சென்றிருக்கும் சூர்யாவுடன் தெலுங்கு ரசிகர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.