கங்குவா திரைப்படத்தில் இணைந்திருக்கும் மற்றொரு பாலிவுட் பிரபலம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் “கங்குவா” திரைப்படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் 3டி தொழில்நுட்பத்துடன் 10 மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை உற்சாக படுத்தியது. மேலும் இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றையும் சூர்யாவின் பிறந்த நாளான இன்று வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் கங்குவா திரைப்படத்தில் நடிகை திஷா பதானியை தொடர்ந்து பிரபல பாலிவுட் நடிகர் பாப் டியோல் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.