Kamal Haasan
இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட் விபத்தில் சிக்கியவர்களுக்கு கமல்ஹாசன் இழப்பீடு அளிப்பதாக அறிவித்துள்ளார்.

Kamal Haasan Announcement : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2.

இந்த படத்தின் படப்பிடிப்பில் நேற்றிரவு செட் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த போது கிரேன் அறுந்து விழுந்த விபத்தில் உதவி இயக்குனர் கிருஷ்ணா, உதவி கலை இயக்குனர் ஒருவர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்த மது ஆகியோரும் உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இன்று உயிரிழந்தவர்களுக்கு உடலுக்கு மருத்துவமனையில் அஞ்சலி செலுத்திய கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கும் ரூ 1 கோடி இழப்பீடு அளிப்பதாக அறிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.