சுந்தர்.சி இயக்கும் ரஜினி படத்தில், கேமியோ ரோலில் கமல் நடிக்கிறாரா?

சூப்பர் ஸ்டார் ரஜினி தொடர்ந்து சீரியஸான படங்களிலேயே நடித்து வருகின்றார். எனவே, மீண்டும் லைட்டான ஜாலியான ஒரு படத்தில் ரஜினியை பார்க்கவேண்டும் என பலர் விரும்பினர். அவ்வகையில், ரஜினி மீண்டும் சுந்தர்.சி இயக்கத்தில் கலகலப்பான கமர்ஷியல் படத்தில் நடிக்கவுள்ளார். இதனால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
கமல்ஹாசன் தயாரிப்பில் முதல் முறையாக ரஜினி நடிக்கின்றார். இதற்கு முன்பு கமல் தயாரித்த ஒரு சில படங்களில் அவர் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். மகளிர் மட்டும், நள தமயந்தி என கமல் தயாரித்த படங்களில் கேமியோ ரோல் செய்திருக்கின்றார்.
மேலும், ரஜினியுடன் ஆரம்ப காலகட்டத்தில் பல படங்களில் இணைந்து நடித்திருக்கும் கமல் ‘தில்லு முல்லு’ என்ற படத்தில் கேமியோவில் வந்து கலக்கியிருப்பார். அதுபோல, கமலின் தயாரிப்பில் முதல் முறையாக ரஜினி தற்போது நடிக்கவுள்ளார்.
எனவே, இப்படத்தில் ரஜினியுடன் கமல் இணைந்து ஒரு காட்சியிலாவது நடிப்பாரா? என்பது ரசிகர்களின் கேள்வியாகவும் விருப்பமாகவும் இருக்கின்றது. அடுத்ததாக ஒரு முழு நீள படத்தில் கமலும் ரஜினியும் இணைந்து நடிக்க இருக்கும்போது ‘தலைவர் 173’ படத்தில் கமல் கேமியோ செய்ய வாய்ப்பில்லை என்பதுபோல தெரிகின்றது.
ஒருவேளை ரஜினியும் கமலும் இணைந்து நடிக்கவில்லை என்றால் ‘தலைவர் 173’ படத்தில் கமல் கேமியோ ரோலில் வர வாய்ப்பிருந்திருக்கலாம். ஆனால், தற்போது இருவரும் இந்த படத்திற்கு பிறகு, ஒரு படத்தில் இணைந்து நடிக்க இருக்கின்றனர். எனவே, கமல் இப்படத்தில் கேமியோ ரோலில் வர வாய்ப்பில்லை என பெரும்பாலானோர் கணிக்கின்றனர்.
