நடிகை காஜல் அகர்வாலுக்கு ஆண் குழந்தை பிறந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Kajal Agarwal Blessed with Boy Baby : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். தமிழ் சினிமாவின் பரத் நடிப்பில் வெளியான பழனி என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதன் பின்னர் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

கடந்த வருடம் தொழிலதிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால் கர்ப்பமாக இருந்து வந்த நிலையில் தற்போது அவர் அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

இந்த தகவல் இணையத்தில் வைரலாக ரசிகர்கள் பலரும் காஜல் அகர்வாலுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.