காலங்களில் அவள் வசந்தம் படத்தின் முழு விமர்சனங்களை பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனர் ராகவ் மிர்தத் இயக்கத்தில் கௌஷிக் ராம், அஞ்சலி நாயர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் காலங்களில் அவள் வசந்தம்.

படத்தின் கதைக்களம் :

ஐடி துறையில் வேலை பார்க்கும் கௌஷிக் காதல் என்பது சினிமாவில் வருவது போல தான் என நினைத்து எப்படி எல்லாம் காதலிக்க வேண்டும் என எழுதி வைத்து சில பெண்களை காதலிக்க கடைசியில் அவை அனைத்தும் தோல்வியில் முடிகிறது. இப்படியான நிலையில் அஞ்சலி நாயர் தன்னுடைய குடும்பத்துடன் அஞ்சலி நாயர் அப்பாவின் நண்பரான கௌஷிக் வீட்டுக்கு வர கௌஷிக் மீது காதல் வயப்படுகிறார்.

நேரடியாக காதலிப்பதாக சொல்லி இந்த காதல் கல்யாணம் வரை வருகிறது. கல்யாணம் முடிந்த நிலையில் கவுசிக்கில் பழைய காதல் கதைகள் தெரிய வர அஞ்சலி நாயர் அவனை விட்டு பிரிய முடிவெடுக்கிறார். அதன் பிறகு கௌஷிக் வாழ்க்கையில் நடந்தது என்ன? என்பது தான் இந்த படத்தின் கதைக்களம்.

படத்தைப் பற்றிய அலசல் : அறிமுக நடிகர் கௌஷிக் ராம் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்த அஞ்சலி நாயர் அழகிய நடிப்பை கொடுத்துள்ளார்.

காதல் காட்சிகளில் கௌஷிக் அழகாக ஸ்கோர் செய்துள்ளார்.

படத்தின் இசை மற்றும் ஒளிப்பதிவு பலம் சேர்த்துள்ளது. பாடல்கள் சுமார் ரகம்.

தம்ப்ஸ் அப் :

1. கௌஷிக் ராம், அஞ்சலி நாயர் நடிப்பு

2. ஒளிப்பதிவு

3. இயக்கம்

தம்ப்ஸ் டவுன் :

1. சில லாஜிக்கல் தவறுகள்

REVIEW OVERVIEW
காலங்களில் அவள் வசந்தம் விமர்சனம்
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
kaalangalil-aval-vasantham-movie-reviewமொத்தத்தில் காலங்களில் அவள் வசந்தம் உண்மையான காதலை சொல்லும் கதை.