John Mahendran About Suriya Movie Issue
John Mahendran About Suriya Movie Issue

இலவச விளம்பரத்தை ஆரம்பிச்சிட்டிங்க போல என சூர்யா பட பிரச்சனை குறித்து விஜய் பட இயக்குனர் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

John Mahendran About Suriya Movie Issue : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதிச்சுற்று படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரை போற்று. இந்தப் படம் அக்டோபர் 10ம் தேதி அமேசான் பிரைம் வீடியோ வழியாக வெளியாக உள்ளது‌‌.

ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் இருந்து மண்ணுருண்ட என்ற பாடல் வெளியாகி இருந்தது. இந்த பாடலில் ஜாதி ரீதியான வரிகள் இடம் பெற்றிருப்பதாகவும் இதனால் படத்தை 2022 ஆம் ஆண்டு வரை ரிலீஸ் செய்ய தடை விதிக்க வேண்டும் எனவும் தர்மபுரியைச் சேர்ந்த ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அஜித் கடவுள் மாதிரி – 67 வயது முதியவரின் உருக்கமான பேச்சு..!

இதனை விசாரித்த நீதிமன்றம் காவல்துறை இது குறித்து விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு தீர்ப்பு வழங்கியது.

இந்த நிலையில் தற்போது இந்த விவகாரம் குறித்து விஜயின் சச்சின் பட இயக்குநரான ஜான் மகேந்திரன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் இலவச விளம்பரம் ஆரம்பிச்சுட்டீங்க போல…குட் பாய்ஸ் என பதிவிட்டுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.