YouTube video

Ajith Sir Like A God – Thala Fan JOHN MICHAEL Emotional Speech

Ajith Rajini Phone Call Details : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரையுலகில் அறிமுகமாகி 45 ஆண்டுகள் முடிவடைந்து விட்டன.இதனை கொண்டாடும் விதமாக காமன் டிபி புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

திரையுலக பிரபலங்கள் பலரும் ரஜினியின் 45 ஆண்டுகால திரைப்பயணம் குறித்து பேசி அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில் எந்தவித சமூகவலைதள பக்கத்திலும் இல்லாத அஜித் தொலைபேசி வாயிலாக ரஜினியைத் தொடர்பு கொண்டு அவருக்கு வாழ்த்து கூறியது மட்டுமல்லாமல் ரஜினியின் உடல் நலம் குறித்து விசாரித்ததாகவும் தகவல்கள் வெளியானது.

அதுமட்டுமல்லாமல் தன்னுடைய நண்பரான சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படம் பற்றி அரை மணி நேரத்திற்கு மேலாக பேசியதாகவும் கூறப்பட்டது.ஆனால் உண்மையில் அப்படி எதுவும் நடைபெறவில்லை. சமூக வலைத்தளத்தில் வைரலாக தகவல் முழுக்க முழுக்க வதந்தி என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் ரஜினி மீது உண்மையான மதிப்பும் மரியாதையும் கொண்டவர் அஜித் எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியான பில்லா படத்தின் ரீமேக்கில் அதே பெயரில் தல அஜித் நடித்திருந்தார் அப்படம் மாபெரும் வெற்றி பெற்றிருந்தது.

அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தல அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படத்தை பார்த்து விட்டு இயக்குனரை அழைத்து வாழ்த்து தெரிவித்திருந்தார். அது மட்டுமல்லாமல் தற்போது சிவா இயக்கத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.