ஜனநாயகன் படத்தின் கதை என்ன தெரியுமா? ரசிகர்களுக்கு காத்திருக்கும் தரமான தகவல்..!

ஜனநாயகன் படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
H.வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும்,உருவாகியுள்ள இந்த படத்தில் பூஜா ஹேக்டே, மமீதா பைஜூ, பாபி தியோல், நரேன் ,பிரியாமணி, மோனிஷா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இதன் பிறகு இவர் முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது வாக்குகள் என்பது எவ்வளவு முக்கியமானது என்றும் தேர்தலில் வாக்களிப்பதற்கு முக்கியத்துவத்தை பற்றி ஜனநாயகம் படம் பேச உள்ளதாகவும் சொல்லப்படுகிறது இது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் விஜயின் வசனங்கள் தீயாய் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளது.
