கொண்டாட்டத்துக்கு தயாரா மக்களே.. ஜனநாயகன் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ.!!
ஜனநாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும்,H. வினோத் இயக்கத்திலும் உருவாகி வரும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.மேலும் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமீதா பைஜூ,பிரியாமணி, நரேன் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், விஜயின் பிறந்த நாளான ஜூன் 22 ஆம் தேதி 12:00 AM மணிக்கு இந்த படத்தின் முதல் பாடல் வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இந்த அப்டேட் ரசிகர்கள் இடையே மகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
A lion is always a lion
& his first roar is incoming 🔥June 22 | 12.00 AM#JanaNayaganTheFirstRoar #JanaNayagan#Thalapathy @actorvijay sir #HVinoth @hegdepooja @anirudhofficial @thedeol @_mamithabaiju @prakashraaj @menongautham #Priyamani @itsNarain @Jagadishbliss… pic.twitter.com/a0PZ67R4MF
— KVN Productions (@KvnProductions) June 20, 2025