நகை விஷயத்தில் சிக்கிய ரோகினி, வெளுத்து வாங்கிய விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
நகை விஷயத்தில் ரோகினி சிக்க,விஜயா வெளுத்து வாங்கியுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்று எபிசோடில் சிந்தாமணி வீட்டில் ஆட்டம் பாட்டத்துடன் விஜயா டான்ஸ் ஜாலியாக இருக்க கொஞ்ச நேரத்தில் சிந்தாமணிக்கு தெரிந்து பிரெண்ட்ஸ் வருகின்றனர் அவர்களை சிந்தாமணி வரவேற்க அவர்கள் விட்டுக் கொடுக்கின்றனர் கிப்ட் வாங்கிய சிந்தாமணி விஜயா டான்ஸாடிக் கொண்டிருக்கிற அவரை கூப்பிட்டு அறிமுகப்படுத்தி வைக்கிறார்.
இருவரும் பேசிக்கொண்டு இருக்கும்போது அந்த பெண்மணி விஜயா கழுத்தில் இருக்கும் செயினை கண்டுபிடித்து விடுகிறார் இந்த செயின் எங்க வாங்க நீங்க என்று கேட்க இது என்னோட மருமக வாங்கி கொடுத்தா அவ ரொம்ப பணக்காரி என்று பில்டப் கொடுக்க இது என்னோட செயின் மாதிரி இருக்கு என்று சொல்லுகிறார் இல்லங்க இது என்னோட மருமகள் எனக்காக வாங்கி கொடுத்தது ஒரே மாதிரியே நிறைய செயின் இருக்கலாம் அல்ல என்று சொல்ல இல்லை இது கண்டிப்பா என்னோட செயின்தான் என்று அந்த பெண்மணி சொல்லுகிறார். அதுல கூட ஒரு கல்லு விழுந்திருக்கும் இது மட்டும் இல்லாம பின்னாடி CT ன்னு இருக்கும் என்று சொல்லுகிறார். விஜயா அப்படி எல்லாம் இருக்காது என்று சொல்ல நாங்கள் இந்த செயின் திருடு போயிருச்சு போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்து இருப்போம் என்று அந்த பெண்மணி சொல்லுகிறார் உடனே சிந்தாமணி என்ன மாஸ்டர் இதெல்லாம் என்று கேட்கிறார் இல்லனா நீங்க கழட்டி செயினை திருப்பி பாருங்க அவங்கதான் இன்ஷியல் இருக்குன்னு சொல்றாங்கல்ல என்று சொல்ல விஜயாவும் கழட்டி திருப்பி பார்க்கிறார். அதில் CT என்று இருப்பதால் அந்தப் பெண்மணி ஓட நகை என்று தெரிய வருகிறது அவரும் அதை பிடுங்கிக் கொண்டு இந்த மாதிரி ஆளுங்க கூட எல்லாம் எதுக்கு பேசுறீங்க என்று கேட்கிறார்.
உங்க மருமக தான் திருடிய இல்ல உங்க குடும்பமே திருட்டு குடும்பமா என்றெல்லாம் அசிங்கப்படுத்தி விஜயாவை பேச கோபமாக அங்கிருந்து வந்து விட சிந்தாமணி சந்தோஷப்படுகிறார் என்னை டான்ஸ் கிளாஸ் வர வேணாம்னு சொன்ன இதெல்லாம் உனக்கு தேவைதான் என்று சொல்லி மனதில் நினைக்கிறார். வீட்டில் கோபமாக விஜயா உட்கார்ந்து இருக்க ரோகினி மனோஜ் வருகின்றனர் ரோகிணி உங்களுக்காக நான் ஆன்லைன்ல ஒரு புடவை வாங்கி இருக்க ஆண்ட்டி இது உங்களுக்கு சூப்பரா இருக்கும் என்று சொல்லி கொடுக்க விஜயா அந்த புடவையை வாங்கி கோவமாக பிரித்து இதையும் வாங்கினியா திருடுனியா என்று ரோகினி மூஞ்சியில் விசிறி அடிக்கிறார். உடனே சத்தம் போட்டு ரோகினியை திட்ட குடும்பத்தில் இருக்கும் அனைவரும் வந்து விடுகின்றனர் உடனே ரோகிணியை பக்கத்தில் உட்கார வைத்து அந்த நகையை எங்க திருடுன என்று சொல்லி புடவையில் அடிக்க முத்து அண்ணாமலையை கூப்பிட அவர் வந்து நிறுத்து விஜயா என்று சொல்லுகிறார்.
எதுக்கு இப்படி அடிச்சு கிட்டு இருக்க என்ன ஆச்சி என்று கேட்கிறார். இவை எனக்கு கொஞ்ச நாள் முன்னாடி ஒரு செயின் வாங்கி கொடுத்தால் அதை இவர் வாங்கல திருடி இருக்கா என்று சொல்லுகிறார். கொஞ்ச நேரம் இல்லன்னா நான் ஜெயிலுக்கு போய் இருப்பேன் போலீசை கூப்பிட பார்த்தாங்க எப்படியோ சமாளிச்சு வந்துட்டேன் என்று சொல்ல அப்போது திருட்டு நகையா என்று முத்து சொன்ன ரவி நல்லவேளமா இல்லனா உங்களை ஜெயில்ல போட்டு இருப்பாங்க என்று சொல்லுகிறார். உடனே ரோகினி இடம் உன்ன நான் திட்டினதுக்காகவும் அடிச்சதுக்காகவும் என்னை பழிவாங்க இப்படி பண்ணியா என்று கேட்க நான் உங்க மேல இருக்கிற பாசத்துல ஒருத்தர்கிட்ட காசு கொடுத்து தான் வாங்குனேன் நான் திருடல என்று சொல்ல விஜயா நம்ப மறுக்கிறார்.
நீ எவ்வளவு கொடுத்தத நகையை வாங்கணும் என்று கேட்க ஒரு லட்சம் என்று சொல்ல உன் மூஞ்சி அந்த நகம் 2 லட்சம் அவ்ளோ கம்மியா யாராவது நகையை கொடுப்பாங்களா? என்னை ஏமாற்ற தெரிந்த உனக்கு யோசிக்க தெரியாதா என்று கோபப்பட ரோகினி கண்கலங்கி அழுகிறார். உடனே அண்ணாமலை ஏதோ ஏமாந்துட்டா அதுக்கப்புறம் இந்த பிரச்சினையை இப்படியே விடு என்று சொல்லிவிட்டு சென்றுவிட, விஜயாவின் முடிவு என்ன? ரோகினி என்ன செய்யப் போகிறார்? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
