‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழா: கின்னஸ் சாதனை படைக்குமா?

விஜய்யின் கடைசிப் படமாக வெளியாகவிருக்கும் ‘ஜனநாயகன்’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அனிருத் இசையில் படத்தின் முதல் சிங்கிளான ‘தளபதி கச்சேரி’ என்ற பாடல் வெளியாகி வைரலானது. இதனைத் தொடர்ந்து, டிசம்பர் முதல் வாரத்தில் இரண்டாவது பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், டிசம்பர் இறுதியில் ‘ஜனநாயகன்’ பட இசை வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமாக மலேசியாவில் நடைபெற உள்ளது. இசை வெளியீட்டு விழாவோடு சேர்த்து, ஒரு கான்சர்ட்டையும் படக்குழு திட்டமிட்டுள்ளது.
அந்த கான்சர்ட்டில் திரையுலகில் இருக்கும் பல முன்னணி பாடகர்கள் கலந்துகொள்ள இருக்கின்றார்கள். முழுக்க முழுக்க விஜய் படத்தின் பாடல்களை பாடி ரசிகர்களை குஷிப்படுத்த உள்ளனர். இந்நிலையில், இசை வெளியீட்டு விழா மற்றும் கான்சர்ட் ஆகியவை பிரம்மாண்டமாக நடைபெற இருக்கும் நிலையில், இந்த விழா கின்னஸ் சாதனையில் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதாவது, இசை வெளியீட்டு விழா மலேசியாவில் உள்ள மிகப்பெரிய ஸ்டேடியம் ஒன்றில் நடைபெற உள்ளது. அந்த ஸ்டேடியத்தில் ஒரே சமயத்தில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் அமரலாம். எனவே, விழாவிற்கு ஒரு லட்சத்திற்கு அதிகமான ரசிகர்கள் வருகை தர உள்ளனர். அவ்வகையில் ஒரு இசை வெளியீட்டு விழா ஒரு லட்சத்திற்கு மேல் பார்வையாளர்களை கொண்டு நடப்பது இதுவே முதல் முறையாக இருக்கும். எனவே, இதனை படக்குழு கின்னஸ் சாதனைக்கு அனுப்ப முடிவெடுத்து இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.
