
இதுவரை ஜெயிலர் படத்தின் வசூல் எவ்வளவு என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெயிலர். நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
உலகம் முழுவதும் ரிலீஸான நாள் முதல் தற்போது வரை இந்த திரைப்படம் வசூலில் மாஸ் காட்டி வருகிறது. இப்படியான நிலையில் தற்போது வரை இந்த திரைப்படம் ரூபாய் 525 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.