ஜெயிலர் திரைப்படத்தின் Hukum பாடலுக்கான வியூஸ் அப்டேட்டை படக்குழு பகிர்ந்துள்ளது.

தமிழ் சினிமாவில் மாபெரும் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். மிகப்பெரிய ரசிகர்களைக் கொண்டுள்ள அவரது நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி ஜெயிலர் திரைப்படம் வெளியானது. நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் அனிருத் இசையமைத்திருந்த இப்படத்தில் ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்திருந்தனர். இப்படம் வெளியான நாள் முதல் தற்போது வரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வசூலில் சாதனை படைத்து வருகிறது. சமீபத்தில் இப்படம் உலக அளவில் ரூபாய் 525 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.

இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரும் நிலையில் ஜெயிலர் திரைப்படத்தின் புது அப்டேட்டை படக்குழு பகிர்ந்துள்ளது. அதன்படி, இப்படத்தில் இடம்பெற்றுள்ள ரஜினியின் சூப்பர் ஹிட் பாடலான ‘ஹுக்கும்’ பாடல் 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்திருப்பதாக படக்குழு வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது. அது தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வைரலாகி வருகிறது.