ஜெய்லர் திரைப்படத்தில் இணைந்திருக்கும் பிரபலங்களின் பட்டியலை சன் பிக்சர்ஸ் twitter பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலிப் குமார் இயக்க இருக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். அனிருத் இசை அமைப்பில் உருவாகும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கப்பட உள்ளதாக பர்ஸ்ட் லுக் போஸ்டர் உடன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் நேற்று முன்தினம் வெளியிட்டுள்ளது. அப்போஸ்டாரில் நடிகர் ரஜினிகாந்த் வயதான தோற்றத்தில் கண்ணாடியுடன் கெத்தாக நின்று கொண்டிருக்கிறார். இதனை ரசிகர்கள் வைரலாக்கி வந்தனர்.

இந்நிலையில் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்கும் பிரபலங்களின் பட்டியலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறது. அதன்படி இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி ஆகியோர் இணைந்துள்ளதாக இப்பதிவின் மூலம் அதிகாரவபூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது.