Pushpa 2

ஜெயிலர் 2 : ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்..முழு விவரம் இதோ..!

ஜெயிலர் 2 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.

jailer 2 movie latest update viral

jailer 2 movie latest update viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவரது நடிப்பில் ஜெயிலர் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன்,தமன்னா, விநாயகன்,சுனில்,மோகன் லால், போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்திற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடப்பதாகவும் டிசம்பர் 5ஆம் தேதி ப்ரோமோ வீடியோவிற்கான ஷூட்டிங் நடத்தப் போவதாகவும் சொல்லப்படுகிறது.

அந்த வீடியோவை ரஜினிகாந்த் பிறந்த நாள் டிசம்பர் 12ஆம் தேதி படத்தின் அறிவிப்புடன் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

jailer 2 movie latest update viral

jailer 2 movie latest update viral