பிரபல தமிழ் நடிகைக்கு 6 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது எழும்பூர் நீதிமன்றம்.
தமிழ் சினிமாவில் மன்மத லீலை, நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஜெயப்பிரதா.
இவர் நடத்தி வந்த தியேட்டரில் பணியாற்றி வந்த தொழிலாளர்களுக்கு முறையாக செலுத்த வேண்டிய ESI தொகையை செலுத்தாமல் விட்டுள்ளார். இதனால் காப்பீட்டு கழகத்தில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து காப்பீட்டு கழகம் தொடர்ந்த வழக்கில் எழும்பூர் நீதிமன்றம் நடிகை ஜெயப்பிரதாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.