நட்பை பாராட்டும் விதமாக ஜெயில் படத்தில் இருந்து வெளியான பத்து காசு இல்லனாலும் நான் பணக்காரன்டா என்ற பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
Jail Movie Friendship Song : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும் இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். இவரது நடிப்பில் இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ஜெயில்.
ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வெகுவிரைவில் ரிலீசாக உள்ளது.
இந்த படத்தில் இருந்து ஏற்கனவே வெளியான காத்தோடு காத்தானேன் என்ற பாடல் 7 மில்லியன் பார்வையாளர்களை பெற்று பெரும் சாதனை படைத்துள்ளது. இந்த பாடலை நடிகர் தனுஷ் மற்றும் நடிகை அதிதி ராவ் ஆகியோர் இணைந்து பாடி இருந்தனர்.
இதனையடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை ( ஆகஸ்ட் 18 ) அடுத்த பாடலாக பத்து காசு இல்லனாலும் நான் பணக்காரன் டா என்ற பாடல் வெளியானது.
கவிஞர் அறிவு இந்த பாடல் வரிகளை எழுதியுள்ளார். நட்பிற்கு சமர்ப்பணம் செய்யும் விதமாக உருவாக்கி உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த ஜெயில் படத்தை கிரிகேஷ் சினி கீரியேஷன் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரித்துள்ளார்.
இவர் மிஷ்கின் இயக்கிய சவரகத்தி, விஷாலின் இரும்புத்திரை ஆகிய வெற்றிப் படங்களை வெளியிட்டவர். சினிமா மீதுள்ளகாதலால் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தை விரைவில் ரிலீஷ் செய்வதோடு அடுத்து பல படங்களை தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளார் ஸ்ரீதரன் மரியதாசன்.