Irumbukai Mayavi Fan Made Poster

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாக்கப்படும் இரும்புக்கை மாயாவி படத்தின் ஃபேன் மேட் ஃபர்ஸ்ட் லுக் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

Irumbukai Mayavi Fan Made Poster : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் தற்போது சூரரைப் போற்று என்ற திரைப்படம் உருவாகி உள்ளது.

சுதா கொங்கரா இயக்க ஜி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் உலகம் முழுவதும் அக்டோபர் 10ம் தேதி அமேசான் பிரைம் வீடியோ வழியாக வெளியாகிறது.

மாஸ்டர் பட ரிலீஸ் எங்களுக்கே பெரிய ஏமாற்றம் தான்.. லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்.!!

இந்த படத்திற்கு அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படம், லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

ஏற்கனவே சூர்யா மற்றும் லோகேஷ் கனகராஜ் இணையும் கதைக்கு இரும்புக்கை மாயாவி என டைட்டில் வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில் தற்போது ரசிகர்கள் இரும்புக்கை மாயாவி படத்திற்காக ஃபேன் மேட் போஸ்டர் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

அந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.

லோகேஷ் கனகராஜ் மற்றும் சூர்யாவின் கூட்டணிக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ரசிகர்களின் கமெண்ட்ஸ்