சம்மரில் நந்திதா ஸ்வேதா நடிப்பில் உருவாகியுள்ள IPC 376 படம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

IPC 376 Movie From Summer 2021 : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நந்திதா ஸ்வேதா. அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகினார். இப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி, சசிகுமார் உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். மேலும் தளபதி விஜய்யின் புலி படத்திலும் நடித்திருந்தார்.

தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் IPC 376. இந்த படத்தை ராம்குமார் இயக்கியுள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீஸர், டிரைலர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நந்திதா ஸ்வேதா போலிஷ் அதிகாரியாக நடித்துள்ளார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எழுந்துள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த படம் வரும் 2021 சம்மரில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்தை எஸ் பிரபாகரின் பவர் கிங்க் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்க யாதவ் ராமலிங்கம் இசையமைத்துள்ளார். கே தில்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்மரில் ரிலீசாகிறது நந்திதா ஸ்வேதாவின் IPC 376 - ரசிகர்கள் மத்தியில் எகிறிய எதிர்பார்ப்பு.!!