Indraja Shankar Reply to Fan
Indraja Shankar Reply to Fan

உங்க அப்பாவை லவ் பண்ணுற மாதிரி நடிக்க சொன்னால நடிப்பீர்களா என ரசிகர்கள் மோசமான கேள்விக்கும் கூலாக பதில் அளித்துள்ளார் ரோபோ சங்கரின் மகள்.

Indraja Shankar Reply to Fan : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக காமெடி நடிகராக தன்னுடைய பயணத்தை தொடங்கி இன்று வெள்ளித்திரையில் முன்னணி காமெடி நட்சத்திரங்களில் ஒருவராக கலக்கி வருபவர் ரோபோ சங்கர்.

சந்திரமுகி 2 படத்தில் நடிக்க கேட்ட படக்குழு, ஜோதிகா கொடுத்த அதிர்ச்சி..? – வெளியான ஷாக்கிங் தகவல்!

இவரின் மனைவி பிரியங்காவும் தற்போது படங்களில் நடிக்கத் தொடங்கி உள்ளார். அதுமட்டுமல்லாமல் ரோபோ ஷங்கரின் மகளான இந்திரஜாவும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தளபதி விஜய் நடித்த பிகில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

தற்போது பள்ளி படிப்பை பயின்று வரும் இந்திரஜா படிப்பை முடித்த பிறகு நடிப்பைத் தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சமூக வலைதளப் பக்கங்களில் டிக் டாக் வீடியோ, போட்டோஷுட் புகைப்படம் என தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும் இவர் ரசிகர்களின் கேள்விக்கு லைவ் சேட்டில் பதில் அளித்துள்ளார்.

அப்போது ரசிகர் ஒருவர் உங்க அப்பாவ லவ் பண்ணுற மாதிரி நடிக்க சொன்னா நடிப்பீர்களா என கேள்வி கேட்டுள்ளார்.

இந்த மோசமான கேள்விக்கும் இந்திரஜா சங்கர் கூலாக பதில் அளித்துள்ளார்.

நல்ல கேள்வி.. சூழ்நிலை அப்படித்தான் என்றால் நான் நிச்சயம் பண்ணுவேன். நான் எங்க அப்பாவை லவ் பண்ணுறேன். அவ்வளவுதான் சிம்பிள் ப்ரோ என அவர் நச்சுனு பதில் கூறியுள்ளார்.

இந்திரஜா சங்கரின் இந்த பதிலை பார்த்த ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

காதலை வெளிப்படுத்திய போட்டியாளர், வெக்கப்படும் முகென் – வைரலாகும் ப்ரோமோ வீடியோ.!

அதேபோல் இந்த லாக் டவுன் நாட்களில் என்ன கற்றுக் கொண்டீர்கள் என இன்னொரு ரசிகர் கேட்டதற்கு நிறைய கற்றுக் கொண்டேன். கோபத்தை குறைத்து விட்டு சமைக்க கற்றுக் கொண்டு இன்னும் நிறைய இருக்கு ப்ரோ என கூறியுள்ளார்.

மேலும் இவர் கடந்த அன்னையர் தினத்தன்று தன்னுடைய தாயாருடன் சேர்ந்து டிக் டாக் வீடியோ ஒன்றை செய்து அந்த வீடியோவை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் இந்திரஜா சங்கர் இறுதியாக வெளியிட்ட அழகிய புகைப்படம் இதுதான்