Indian team Entered the Semi-finals : Sports News, World Cup 2019, Latest Sports News, World Cup Match, India, Sports, Latest News,India vs Bangladesh

Indian team Entered the Semi-finals :

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 40-வது லீக் ஆட்டம் பர்மிங்காமில் நடைபெற்றது. இதில் வங்க தேச அணி மற்றும் இந்திய அணிகள் பல பரிட்சை செய்தனர். முதலில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார்.

ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆரம்பம் முதலே வங்காள தேசத்தின் பந்துவீச்சை இருவரும் ஒரு கை பார்த்தனர்.

அதனை தொடர்ந்து தனது 4வது சதத்தையும் உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா பதிவு செய்தார். 92 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

அடுத்ததாக அரை சதமடித்து ஆடிய லோகேஷ் ராகுல் 77 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய ரிஷப் பந்த் 48 ரன்னில் ஆட்டம் இழந்தார். இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 314 ரன்களை எடுத்து இருந்தது.

315 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காள தேசம் களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தமிம் இக்பால், சவுமியா சர்க்காரும் ஆடினர்.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், ஷகிப் அல் ஹசன் ஓரளவு தாக்குப்பிடித்து அரை சதமடித்து அசத்தினார். அவர் 66 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

44 படங்களை இயக்கிய பெண் இயக்குனர் விஜயா நிர்மலா மரணம் – சோகத்தில் திரையுலகம்.!

இறுதியில், முகமது ஷைபுதின் அரை சதமடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆனாலும், வங்காள தேசம் 50 ஓவரில் 286 ரன்களை மட்டுமே எடுத்தது.

இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன், உலகக்கோப்பை அரை இறுதி சுற்றுக்கும் முன்னேறியது.

இந்தியா சார்பில் பும்ரா 4 விக்கெட்டும், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டும், ஷமி, சாஹல், புவனேஷ்வர் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.