Indian 2

Indian 2 : இந்தியன் 2 படப்பிடிப்புகளை தள்ளி போட்டு கமல்ஹாசன் பாராளுமன்ற தேர்தலில் கவனம் செலுத்தி வருவதால் தயாரிப்பு நிறுவனம் அதிருப்தி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

உலக நாயகன் கமல்ஹாசன் தன்னுடைய கடைசி படமாக ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வந்தார்.

இந்தியன் 2-ல் இருந்து சிம்புவை வெளியேற்றிய படக்குழு – அம்பலமான உண்மை.!

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பே திட்டமிட்ட பட்ஜெட்டை விட மூன்று மடங்கு செலவாகியுள்ளது. மேலும் தற்போது செட்டிற்கு வாடகையாக நாளொன்றிற்கு ரூ 70 ஆயிரம் கட்டி வருகிறதாம் லைகா நிறுவனம்.

இப்படியான நிலையில் கமல்ஹாசன் சரிவர படப்பிடிப்பிற்கு வராமல் பாராளுமன்ற தேர்தலில் கவனம் செலுத்தி வருகிறாராம். இதனால் தயாரிப்பு நிறுவனம் அதிருப்தி அடைந்துள்ளது.

மேலும் முதல் கட்ட படப்பிடிப்பே திட்டமிட்ட பட்ஜெட்டை விட மூன்று மடங்கு செலவாகி விட்டதாலும் இந்த படத்தை கையிடும் யோசனையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் அங்கிள் ஊடகம் ஒன்றும் செய்தியாக வெளியிட்டுள்ளது. இதனால் கமல்ஹாசன் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஆனால் உண்மை என்ன என்பதை படக்குழு தான் அறிக்கை மூலம் அறிவிக்க வேண்டும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.