இலங்கை மகளிர் அணியுடன் நடந்த 5வது டி20 போட்டியில், 51 ரன் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 4-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.கதுநாயகே விளையாட்டு வளாக மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசியது. இந்தியா 18.3 ஓவரில் 156 ரன் குவித்து ஆல் அவுட்டானது.

அடுத்து களமிறங்கிய இலங்கை அணி 17.4 ஓவரில் 105 ரன் மட்டுமே எடுத்து சுருண்டது. சஞ்ஜீவனி 29, ஷஷிகலா, ஒஷாதி ரணசிங்கே தலா 22 ரன், யசோதா மெண்டிஸ் 10 ரன் எடுக்க, மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.
இந்திய பந்துவீச்சில் பூனம் யாதவ் 3, தீப்தி ஷர்மா, ராதா யாதவ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். 51 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்திய அணி, மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 4-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.