இந்த வாரத்துடன் சன் டிவி சீரியல் இன்று முடிவுக்கு வர உள்ளது. 

End Card to Anbe Vaa Serial Details : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்ந்து சன் டிவி பல்வேறு சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. 

ஒவ்வொரு சீரியல்களுக்கும் தனி ரசிகர் பட்டாளம் இருந்து வரும் நிலையில் ஏதாவது ஒரு சீரியல் முடிவுக்கு வருகிறது என்றால் அது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தி விடுகிறது. சமீபத்தில் அருவி தொடர் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து மேலும் ஒரு சீரியல் முடிய உள்ளதாக தெரிய வந்துள்ளது. 

ஆமாம் அன்பே வா சீரியல் இந்த வாரத்துடன் முடிய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சீரியலின் இறுதி நாள் எபிசோட் வரும் ஞாயிறு அன்று ஒளிபரப்பாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் அன்பே வா சீரியல் ரசிகர்கள் சோகம் அடைந்துள்ளனர். 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.