Hero Movie Release Date Officially Announced - Here is the Full Details.! | Kollywood Cinema News | Tamil Cinema news | Sivakarthikeyan
விஜய் தேவரகொண்டாவின் ஹீரோ திரைப்படம் கைவிடப்பட்டதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் ஹீரோ படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

Hero Movie Release Date : தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்திருப்பவர் சிவகார்த்திகேயன்.

இவர் தற்போது பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் ஹீரோ படம் மட்டுமில்லாமல் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படம், ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படம் என படு பிஸியாக இருந்து வருகிறார்.

வெளியானது காப்பான் ரிலீஸ் தேதி – இது செம பிளான் தான்.!

பி.எஸ் மித்ரன் இயக்கும் படத்திற்கு ஹீரோ என தலைப்பு வைக்கப்பட்டு இருந்தது. அதே போல் விஜய் தேவரகொண்டா நடித்து வந்த படத்திற்கும் ஹீரோ என டைட்டில் வைக்கப்பட்டு இருந்தது. இதனால் இரு படமும் டைட்டிலுக்கு போட்டி போட்டு வந்தது.

சமீபத்தில் விஜய் தேவரகொண்டா படத்தின் ஹீரோ பாடம் கைவிடப்பட்டதாக படக்குழு அறிவித்திருந்தது. இதனையடுத்து தற்போது சிவகார்த்திகேயன் ஹீரோ படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

டிசம்பர் 20-ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் இது ககுறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் கூறிய போது “மிகச்சிறந்த நடிகர்கள் பட்டாளம், தொழில்நுட்ப கலைஞர்களையும், தனித்துவமான கதையையும் கொண்டு மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்த படத்தை நினைத்த மாதிரி உருவாக்க சரியான காலம் தேவை.

இந்த அம்சத்தில் சிறந்ததை கொண்டு வருவதில் ஒரு குழுவாக நாங்கள் எங்கள் முயற்சிகளை எடுத்து உழைத்து வருகிறோம். தனிப்பட்ட முறையில், ‘சரியான நேரத்தில் சரியான விஷயம் நடக்க வேண்டும்’ என்ற கோட்பாட்டை நான் கடுமையாக நம்புகிறேன்.

எனவே “ஹீரோ” நீண்ட கிறிஸ்துமஸ் விடுமுறை மற்றும் ஆண்டு இறுதி விடுமுறைகளுக்கு சரியான விருந்தாக இருக்கும் என்று உணர்ந்தேன்” என்றார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் படத்தொகுப்பு செய்கிறார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.