Health Minister Vijayabaskar report on dengue fever
Health Minister Vijayabaskar report on dengue fever

தூத்துக்குடி: டெங்குவை ஒழிக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்த விஜயபாஸ்கர் பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, “தூத்துக்குடி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 2 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஆங்காங்கு டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.

இந்நிலையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரபடுத்தி வருகின்றது. அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோரில் 10% பேருக்கு டெங்கு அறிகுறி உள்ளது. தற்போது பெய்யத் தொடங்கியுள்ள பருவமழை சுகாதாரத் துறைக்கு சவாலாக இருக்கும் என கூறினார்.

மேலும் மக்கள் தங்களது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொண்டால் டெங்குவை ஒழிக்க முடியும் என்று தெரிவித்தார்.

மேலும் டெங்குவை ஒழிக்க தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது என்று தெரிவித்தார்.