Happy Birthday Edappadi Palanisamy | Indian politician and the current Chief Minister of Tamil Nadu | Edappadi | Tamil nadu CM | Chennai | ADMK

Happy Birthday Edappadi Palanisamy :

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு தமிழக பாஜ தலைவர் தமிழிசை மற்றும் கட்சி தலைவர்கள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இன்று பிறந்தநாள் காணும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு பல்வேறு கட்சியின் சார்பில் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவிக்கையில்,

அனைத்து இடங்களிலும் தாமரை மலரும்:தமிழிசை சவுந்தரராஜன் கருத்து!!!

சாமானிய மக்களின் தொண்டராக தன் அரசியல் வாழ்க்கையை தொடங்கி மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் சாமானிய மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றி ஏழை, எளிய மக்களின் கனவுகளை நனவாக்கி வரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

தாங்கள் நீண்ட ஆயுளுடன், உடல் நலத்துடன் மக்கள் சேவையாற்ற இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

இந்த தேர்தல் வெற்றியோடு இன்னும் பல வெற்றிகளை பெற்று மக்கள் தொண்டாற்ற வாழ்த்துகிறேன் என தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறுகையில்: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு என் மனம் நிறைந்த பிறந்தநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

தமிழகத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கும் அனைத்து தரப்பு மக்களின் முன்னேற்றத்திற்கும் தங்கள் தலைமையிலே நடைபெற்று வருகிற உயர்வான பணிகள் மேலும் சிறக்க வளர, தொடர இந்நாளில் தமாகா சார்பில் மனதார வாழ்த்துகிறேன்.

தாங்கள் நல்ல உடல்நலத்துடன் நீடுடிவாழ இயற்கையும், இறைவனும் துணை நிற்க வேண்டுகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு கட்சி தலைவர்கள் தங்களது வாழ்த்து செய்தியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு தெரிவித்து வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.